இன்னைக்கு நேரம் சரியில்ல போலிருக்கு. நேத்து கூகுள் ப்ளஸ்ல நடந்த ஒரு விவாதத்தை படிச்சுட்டு, முன்னேயே தலை தூக்கி தூக்கி அடங்குடா மவனே ன்னு அடக்கி அடக்கி வெச்சிருந்த எண்ணம் திருப்பி தலை தூக்கிடுத்து. மருத்துவம் சார் பதிவு போட முடிவு பண்ணிட்டேன். எல்லாம் என் போதாத காலம்! (உங்களுதும்தான்!)
சீரியஸா பதிவெல்லாம் போட ஆரம்பிக்கும் முன்னே சில எச்சரிக்கைகள். மருத்துவர்கள், மருத்துவ மனைகள் உடன் உறவாட நேர்ந்தால் (சின்னப்பசங்க சரியா புரிஞ்சுக்குங்கப்பா!) தவறான புரிதல் இருக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் பதிவுகள் எழுதுகிறேனே தவிர வேறு நோக்கமில்லை. இதெல்லாம் ஒரு கைட்லைன்னாக மட்டுமே இருக்க முடியும். இங்கே கணினி முன்னே உக்காந்துகிட்டு நோயாளி பத்தி எதையும் உண்மையாக சொல்ல முடியாது. ஆகவே இந்த பதிவுகளில் மருத்துவ தீர்வுகள் வாரா.
எந்த வைத்தியரின் கடமையும் நோயாளியின் நோயைப்பற்றி அவருக்கு புரியக்கூடிய எளிய வழியில் கொஞ்சமாவது சொல்ல வேண்டும் என்பது. இது இப்போது இருக்கிற சூழ்நிலையில் கடினமாகிக்கொண்டு வருகிறது. 50 - 60 வருடங்களுக்கு முன் வைத்தியரை நோயாளிகள் முழுக்க நம்பினார்கள். வைத்தியர்களும் வஞ்சனை இல்லாமல் நேரம் காலம் பாராமல் வைத்தியம் செய்தார்கள். யாரும் இறந்து போனால் வைத்தியம் பார்த்தும் இறந்து போயிட்டாங்க. கொடுத்து வெச்சது அவ்வளோதான் என்று சொல்லுவார்கள். பிரச்சினைகள் இல்லை. இப்போதோ மருத்துவ மனையை சேதப்படுத்தி/ பயமுறுத்தி காசு பார்க்கும் காலமாக இருக்கிறது!
நோய்கள் காம்ப்லெக்ஸ் ஆகிவிட்டன. அல்லது நோய்களின் தன்மையை புரிய வைப்பது காம்ப்லெக்ஸ் ஆகிவிட்டது. இருதயம் பழுதாகிவிட்டது என்று சொல்லலாம். இன்னும் மேலே இன்ன வால்வ் ப்ழுதாகிவிட்டது என்று சொல்லலாம். அதற்கு மேல் நுரையீரலில் அதன் தாக்கத்தை எப்படி புரிய வைப்பது? ஒவ்வொரு நோயாளிக்கும் - இன்னும் மோசம் அட்டெண்டண்ட் என்று சொல்லிக்கொண்டு வரும் ஒவ்வொரு ஆசாமிக்கும்- மருத்துவ பாடமா எடுத்துக்கொண்டு இருக்க முடியும். நடைமுறை சாத்தியமில்லை. என் கணினி பராமரிப்பாளர் ஹார்ட் டிஸ்க் போயிடுத்து சார் என்றால் நான் அதை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? சந்தேகம் இருந்தால் கணினியை இன்னொருவரிடன் கொண்டு போகலாம். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?
நம்பிக்கை இல்லாமல் வைத்தியர் நோயாளி உறவு இருக்க முடியாது. சந்தேகம் இருந்தால் வேறு வைத்தியரை பாருங்கள். இது எப்போதுமே முடியாது - ஒரு அவசரத்துக்கு முடியாது- என்று தெரிந்தேதான் இருக்கிறது.
90 வயதாகும் என் மாமா சொல்லுவார். அவர் காலேஜ் படிக்கும் போது ஸ்டூடண்ட் என்றாலே ஒரு மதிப்பு இருந்ததாம்! அவரு ஸ்டூடண்டுங்க. அவரு தப்பு பண்ண மாட்டாரு/ அவரு சொன்னா சரியா இருக்கும் என்று சாதாரண மக்கள் சொல்வார்களாம். இப்படி நம்பிக்கை வைத்த கேட்டகரி எல்லாம் தேய்ந்து போய் இப்போது அப்படி பொதுவாக நம்பிக்கை வைக்கக்கூடியவர் யாரும் இல்லை என்றாகிவிட்டது.
மருத்துவர் சமுதாயம் ஏதோ தனியாக இல்லை. பாரதி பாடிய பாரத சமுதாயத்தில்தான் இருக்கிறது. இந்த பாரத சமுதாயத்தில் நாம் பார்க்கக்கூடிய நல்லது கெட்டது எல்லாமே இங்கேயும் இருக்கிறது. அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
நானாக எழுத நினைத்து இருப்பவை ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? கேளுங்கள். கூடிய வரை சொல்கிறேன்.
சட்ட சிக்கல்கள் வராமல் இருக்க மருத்துவர் மருத்துவ மனை பெயர்களை தவிர்த்துவிடுங்கள்.
ஆரம்பிக்கலாம்!

ஏற்கெனவே சொல்லி இருக்கேன். ஒரு கண் மருத்துவமனையில் முதலில் நாம் மருத்துவரைப்பார்க்க முடியாது. கவுன்சலிங் என்ற பெயரில் மருத்துவ உதவியாளர்களைத் தான் பார்க்க முடியும். அவங்களுக்கு எவ்வளவு தூரம் நோயின் தன்மை குறித்துத் தெரியும்? கண்ணின் பவர் + _ வேண்டுமானால் புரியலாம். கண்ணில் புரையோடி இருந்தால் அவங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அவங்க பார்த்துச் சொல்லித் தான் அந்த மருத்துவமனையில் மருத்துவரே பார்க்கிறாங்க. கவுன்சிலர் சொல்வதை உறுதி செய்கிறார். நேரடியாக ஆபரேஷன்னு சொல்லிடறாங்க. அப்புறமா உங்களுக்கு வைச்ச லென்ஸ் பொருந்தலைனு சொல்லித் தனிக்கண்ணாடி போடணும்னு சொல்றாங்க. இதை எங்கே போய்ச் சொல்றது! சொன்னாலும் என்ன பயன் கிடைக்கும்? ஆரம்ப கட்டத்திலேயே இரண்டாவது கருத்துக்குப் போனால் சரியா இருக்குமா?
பதிலளிநீக்குபல இடங்களிலும் இது நடைமுறைதான். அத்தைகைய உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கும். அவர்களுக்கு நோயின் தன்மை பற்றி தெரிய வேண்டியதில்லை. ரொடீன், இதை பார்க்க ஒரு டாக்டர் தேவையில்லை என்பது போன்ற விஷயங்களைத்தான் அவர்கள் செய்வர்.
நீக்குபதிவில் சொன்னபடி நம்பிக்கை வேண்டும். இது அவர்கள் பழகும் தன்மையை பொருத்தும் சிகிச்சை பெற்றவர்கள் கருத்தை பொருத்தும் உருவாவது. கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் இன்னொரு டாக்டரை பாருங்கள். கண் உங்களுடையது.
அஸ்டிக்மேடிசம் இருந்தால் அது உள்ளே வைக்கிற லென்சால் கரெக்ட் ஆகாது. கூடுதல் கண்ணாடி வேண்டித்தான் இருக்கும்.
அருமையான தொடக்கம்...ஊருபட்ட வியாதியோடு வருவது..பிறகு மருத்துவரை குறை சொல்வது(சிலர் ஜோசியர் 90 வயதுக்கு மேல் இருப்பார்...என்பதை நம்பிக்கொண்டு 85லேயே போய்விட்டார்..doctor mistake என்பாரும் உண்டு)நோயாளி,அவரது உறவினர்களை தெளிவு படுத்தும் வகையில் எழுதுங்கள்..நன்றி.
பதிலளிநீக்குயெஸ் சார். முடிந்த வரை செய்யலாம்,.
நீக்குகீ அக்கா, வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துட்டேன்.
பதிலளிநீக்குதிவா சார் ! இங்க ப்ரீ consultation தானே!
பதிலளிநீக்குWelcome. Welcome.
என்னோட கேள்வி
பதிலளிநீக்கு1. பேஷண்ட் சுய நினைவோட இருக்கிற பட்சத்தில அவரோட நோய், அதற்கான மருத்துவ வாய்ப்புகள், என்ன நடவடிக்கை எடுக்கலாம் அப்படிங்கறதுக்கான ஆப்ஷன், சாதக பாதகங்கள் பத்தி அவர் கிட்ட மட்டும் பேசலாமில்லையா? கூட வர நண்பர்கள், உறவுகள் கிட்ட இதப்பத்தி விளக்கறதோ, அவங்களுடைய விருப்பப்படி மருத்துவம் செய்யறதோ சட்ட ரீதியாவும், மெடிகல் எதிக்ஸ் ரீதியாவும் சரியா. நம்ம நாட்டுல மட்டும் ஏன் இந்த நடைமுறை? அப்படி ஒரு வேளை நோயாளியின் விருப்பப்படி, கன்செண்டோட மருத்துவ நடவடிக்கை எடுத்தாலும், யாராவது ஏதாவது சந்தேகம் கிளப்பினா போலீஸ், நீதிமன்றம், அதிகார வர்க்கம்லாம் ஏன் அத ஏத்துக்கறது?
தம்பி நல்ல கேள்வி ஒண்ணு கேட்டு இருக்கார். அதுக்கான பதிலை பதிவாவே ஆக்கிடலாம்!
பதிலளிநீக்குதனியா வர பேஷண்டுகள் மிகக்குறைவே. அப்பா, அம்மா, கணவன், மனைவின்னு யாராவது எப்பவும் கூட வருவாங்க. அந்த நேரத்தில ஓபனா பேசறது தப்பில்லை. பேஷண்ட் இல்லாத நேரம் வேற யாரும் வந்தா ஒரு தகவலும் கிடைக்காது. ரெபர் பண்ண டாக்டர் சில சமயம் கூப்பிட்டு கேட்டா பதில் உண்டு. பேஷண்டோட வந்த உறவினர் தனியா ஏதும் சந்தேகம் கேட்க வந்தா சொல்லுவோம். மத்தபடி அந்தரங்க விஷயம் ஏதும் வெளியே சொல்லறதில்லை. எடுத்த முடிவுக்கு பேஷண்ட் ஒத்துக்கலைன்னா சரி வேற எங்காவது போன்னு அனுப்புவோமே தவிர அவங்க கருத்துக்கு எதிரா மருத்துவம் செய்வதில்லை.
பதிலளிநீக்குஇது பொது நடைமுறைதான். எக்சப்ஷன்ஸ் பதிவுகளில வரும்.
போலீஸ், நீதிமன்றம், அதிகார வர்க்கம்லாம் ஏன் அத ஏத்துக்கறது ன்னு கேட்டா, என்ன செய்யறது? அது எங்க தலைவிதி! ப்ராக்சருக்கு ஸ்க்ரூஸ் ப்லேட் போட்டு அப்புறம் அதை எடுத்த பிறகு ப்லேட் உடம்பிலேயே கரைஞ்சுடும்ன்னு நினைச்சேன். இன்னொரு ஆபரேஷன் பண்ணிட்டாங்க ன்னு கேஸ் போட்டு கோர்ட் கேஸ்ஸையும் ஏத்துக்கிட்டு அது 5 வருஷம் இழுக்குது. என்ன செய்யறது?
வாஸ்தவம். எனக்கு விரல்ல ஃப்ராக்சர்னு போனப்போ கைல ப்ளேட் வச்ச ஒரு பையன் அத எடுத்துடு வலிக்கறதுன்னு அடம். டாக்டர் ஏன் எடுக்கணும்னு சொல்றன்னா என் ஃப்ரண்டுக்கும் இப்டி வச்சி முதுகு வலி வந்துடுச்சுங்கறான். கைல வச்சா முதுகு வலி எப்படி வரும்னு கேட்டா இல்ல அவனுக்கு முதுகுல வச்சாங்கங்கறான். எவ்ளோ சொன்னாலும் இல்ல எடுன்னு அடம். அவங்கப்பா அவன் வேணாம்னா எடுக்கறதுதான உங்க வேலைன்னு எகிர்ரார்.
நீக்குஅப்படியெல்லாம் எடுக்க முடியாதுங்க.வேணும்னா வெளிய யாரையாவது கன்ஸல்ட் பண்ணிக்கோங்கன்னா எனக்கு ரயில்வே ஹாஸ்பிடல் இருக்கும்போது ஏன் வெளிய போகணும்னு சண்டை.
அப்பா, இங்க பாரு! செப்டிக்மாதிரி எதாவது ஆனாதான் எடுக்கறது. இல்லைன்னா மாட்டோம்னா அப்ப மட்டும் எடுப்பியான்னு ஃபிஷ்மார்கட் மாதிரி சண்டை.
பாவம் அது டி.என்.பி பண்ண வந்த டாக்டர். சரியா அந்த நேரம் டிபார்ட்மெண்ட் டாக்டர் வந்து என்னய்யான்னா திரும்ப ப்ளேட் எடுன்னு தகராரு.
எங்க ஒர்க் பண்ற.
இந்த ஷாப்ல.
சரி. ப்ளேட் எடுத்துட்டு மெடிகல் அன்ஃபிட்தான் பண்ணனும். அந்த கை உதவாது. என்ன சொல்ற?
அப்டியா. அப்ப இருக்கட்டும். ஆனா வலிக்குதே. எக்ஸர்சைசுக்கு எழுதி குடுங்க.
சரி தொலைன்னு எழுதி குடுத்தார்
:-)))
நீக்குவளர்ர பசங்களா இல்லைன்னா சாதாரணமா அப்படியே விட்டுடலாம். ஆனா சிலருக்கு அது கஷ்டமா இருக்கும். ப்லேட் ஸ்க்ரூவோட வேலை எலும்புகளை இடம் மாறாம க்ஸ் செய்யறது. முறிஞ்ச இடத்தில எலும்பு வளர்ந்த பிறகு அது தேவை இல்லை. அதனால டாக்டர் பண்ணது ஒரு சின்ன சைக்கலாஜிகல் சமாசாரம்தான்!