ம்ம்ம்ம்ம்
நேரம்ன்னு ஒரு வஸ்து எங்கே
கிடைக்கும்ன்னு தெரியலை.
போகட்டும்.
கன்சன்ட்
பத்தி எழுத ஆரம்பிச்சேன்.
ஏதேனும் ஆபரேஷன்
அல்லது டயக்னாஸ்டிக் ப்ரொசீசர்
செய்துக்கப்போனா ஒரு ஒப்புதல் படிவத்தை கை
எழுத்து போட்டுக் கொடுக்கச் சொல்லுவாங்க.
நாமளும் சாப்ட்வேர்
இன்ஸ்டால் பண்ணறா மாதிரி
படக்குன்னு ஒக்கேன்னு கை
எழுத்து போட்டுடுவோம்.
அப்புறம் ப்ரௌசரை
திறக்கறப்ப வலுக்கட்டாயமா
வர சர்ச் பார் மாதிரி,
அப்புறமா ஏதாவது
நமக்கு பிடிக்காதது தெரியவரலாம்.
ஜாக்கிரதையா
இருக்கணும்.
18 வயசுக்கு மேலே
ஆகி,
படிக்கவும்
தெரிஞ்ச ஆசாமி கோர்ட்ல "என்ன எழுதி
இருந்ததுன்னு தெரியாது.
கை எழுத்து
போடச்சொன்னாங்க,
நான் பாட்டுக்கு
கை எழுத்து போட்டேன்"
ன்னு சொன்னா அது
எடுபடாது.
நமக்கு புரியாத
மொழில கன்சன்ட் எழுதி இருந்தா,
கை எழுத்து
போடச்சொல்லறவங்களை அதில என்ன
எழுதி இருக்குன்னு சொல்லச்சொல்லணும்.
சின்ன
ப்ரொசீஜர்தானே ன்னு நாம
பாட்டுக்கு தனியா போகக்கூடாது.
அல்லது ஒரு பொடியனை
கூட அழைச்சுகிட்டுப் போகக்கூடாது.
கூட ஒரு ரெஸ்பான்சிபில்
அடல்ட் இருக்கணும்.
மருத்துவத்துல
எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்.
ஊசி போட்ட பி 12
அலர்ஜி ஆகி போய்
சேர்ந்தவங்க உண்டு.
மருத்துவ
மனையில் ஆபரேஷன் சமயத்தில
அரிதான நோய்,
காட்சி ன்னு
இருந்தா மெடிகல் ஜர்னல்ல
போடவோ அல்லது தன்னோட சேமிப்புக்கோ
படம்,
விடியோ எல்லாம்
எடுக்கிறதுண்டு.
லேப்ராஸ்கோபி
போன்ற ப்ரோசிஜர்ல இது எப்படியும்
நடக்கும்.
அப்புறமா உங்களுக்கு
சிடி கூட தருவாங்க.
வம்பு தும்பு
ஒண்ணும் வர சான்ஸ் இல்லைன்னாலும்
இதை வேண்டாம்ன்னு சொல்ல
உங்களுக்கு அதிகாரம் உண்டு.
இந்த
கன்சன்ட்ல நாலு விஷயம்
முக்கியம்.
முதலாவது சுயேச்சையா
யாரும் வற்புறுத்தாம கை
எழுத்து போடறோமா என்கிறது.
வாசகம் அப்படித்தான்
இருக்கும்.
இரண்டாவது
கொடுக்கிற சிகிச்சை என்னன்னு
நோயாளிக்கு புரிஞ்சுக்க
திறமை இருக்கா என்கிறது.
மூணாவது அப்படி
நோய்க்கு தீர்வா சொல்லப்படுகிறதும்
அதன் பின் விளைவுகளும் தெளிவா
சொல்லப்பட்டனவா என்கிறது.
நாலாவது நோயாளிக்கு
இது எல்லாம் புரிஞ்சு முடிவு
எடுக்கிற தன்மை இருக்கா
என்கிறது.
இந்த நாலிலே எது
இல்லைன்னாலும் அது சட்டப்படி
செல்லுபடியாகாது.
இப்பல்லாம்
சகட்டு மேனிக்கு கோர்ட்ல
கேஸ் வரதால இதெல்லாம் ரொம்ப
முக்கியமாயிடுத்து.
ஒரு 30
வருஷம் முன்னே
இப்படி இல்லை.
நோயாளியோட தேவையை
மருத்துவரே புரிஞ்சு கொண்டு
நிறைவேத்தறதா இருந்தது.
இப்படி
வாங்குகிற ஒப்புதல் சில சமயம்
அடுத்து நடக்கக்கூடிய
விஷயத்துக்கும் கூட சேர்த்து
வாங்குகிறது உண்டு.
முக்கியமா
பிரவசத்துக்கு ஆஸ்பத்ரி
போனால் சிலருக்கு சேருகிற
போதே சிசேரியனுக்கு கன்சன்ட்
கேட்பாங்க.
எப்ப என்ன ஆகும்,
எப்ப படு அவசரமா
தியேட்டர் கொண்டு போக வேண்டி
இருக்கும்ன்னு சொல்ல முடியாது.
அப்ப போய் யாருப்பா
அடெண்டண்ட் ன்னு தேடுறது
கஷ்டம்.
அவர் ஓட்டலுக்கு
சாப்பிட போயிருப்பார்.
வேறெங்கானா
போயிருப்பார்.
சில சமயம்
வயித்தை திறந்து பார்த்த
பிறகே என்ன செய்யலாம்ன்னு
முடிவு எடுக்க வேண்டி இருக்கும்.
அப்ப மயக்கத்தில
இருக்கிற நோயாளிகிட்ட எப்படி
கன்சன்ட் வாங்க முடியும்?
இப்படி
எல்லாம் லீகலா எழுதிட்டேனே
தவிர நடைமுறை சிக்கல்கள்
நிறையவே இருக்கு!
முக்கால்வாசி
பேஷண்டுக்கு எவ்வளோ சொன்னாலும்
தப்பா புரிஞ்சுப்பாங்க!
அதுவும் கான்சர்
மாதிரி வியாதின்னா அவ்வளோதான்!
அந்த நேரத்தில
டாக்டர் சொல்லறது ஒண்ணுமே
மண்டையில் ஏறாது!
அவங்களே முன்னால
முடிவு பண்ணி வெச்சிருக்கறத
மட்டுமே டாக்டர் சொல்லறதா
நினைப்பாங்க.
டாக்டர் பாடு
திண்டாட்டம்தான்.
எப்படியும்
நோயாளிக்கு அவரோட நோயோட தன்மை,
அதுக்கான சிகிச்சை,
அதன் விளைவு,
சிகிச்சை இல்லாட்டா
என்னாகும் என்பது ...
இதை எல்லாம்
மருத்துவர் சொல்லணும் என்கிறது
எதிர்பார்ப்பு!
நீங்க டாக்டர்கிட்ட
போனா இதெல்லாம் கேட்டு
தெரிஞ்சுக்குங்க!
தாங்க்ஸ்
பதிலளிநீக்குநான் கமென்டே போடலை, பப்ளிஷ் பண்ணியாச்சுனு சொல்லிட்டு இருக்கு. :)))
பதிலளிநீக்குவியாதி அதிகம் ஆக, ஆகப் பிரச்னைகள் அதிகம் ஆகிறதா? அல்லது மீடியாவின் தாக்கத்தால் வெளியே தெரிகிறதானு சொல்ல முடியலை. பெரும்பாலும் மீடியாவின் தாக்கமே என்றும் சொல்லலாம். சின்ன விஷயத்தைப் பெரிசாக்கிடறாங்க. :(
வயித்தைத் திறப்பதே அங்கே ஏதோ பிரச்னை என்பதால் தானே!
பதிலளிநீக்குஅப்புறமா எப்படி வயித்தைத் திறந்தப்புறமா என்ன செய்யலாம்னு முடிவு எடுக்க முடியும்?? காரணமே இல்லாமல் வயித்தைத் திறக்க முடியாதே! என்ன காரணம் சொல்லித் திறக்க முடியும்! ஏதோ ஒரு காரணம் இருக்குமில்லையா? அதோடு கூட ஒரு பிரச்னையும் சேர்ந்துக்கும் என்ற அர்த்தத்தில் சொல்றீங்களோ???????????????????
1.@பாலாஜி - யூ ஆர் வெல்கம்!
பதிலளிநீக்கு2. @ கீ அக்கா, ஆமாம் வ்யாதிகள் அதிகமாக ஆக பிரச்சினைகள் அதிகம்தான் ஆகும். அதுல என்ன சந்தேகம்?
வயிறு ஒரு மேஜிக் பாக்ஸ். இப்ப அல்ட்ரா சௌண்ட், லேப்ராஸ்கோபி ன்னு வந்து டயக்னோசிஸ் இம்ப்ரூவ் ஆயிட்டாலும் இன்னும் சில சமயங்களில் உள்ளே என்ன பிரச்சினைன்னு தெரியாமலே இருக்கும்! வயித்தை திறந்து பார்த்தப்பறம் தெரிய வரலாம். சில கான்சர்க்கு திறந்தப்பறம் சர்ஜரி முடியாதுன்னு தெரிய வர வாய்ப்பு உண்டு.