வாக்கிங்!
இன்றைய நாளில் பலருக்கும் அவசியமான நோய் தடுக்கும் ஆரோக்கிய சாதனம் இது!
நம் வாழ்க்கை முறை கடந்த 40-50 வருடங்களில் வெகுவாகவே மாறிவிட்டது. பள்ளியில் படித்த போது நாங்கள் பள்ளிக்கு நடந்தே சென்றோம். நடந்தே திரும்பி வந்தோம். உணவு இடைவேளையில் சீக்கிரமாக உண்டுவிட்டு விளையாடுவோம், விளையாடுவோம், விளையாடுவோம்.... பெல் அடிக்கும் வரை. உடற்பயிற்சி அவ்வளவு இருந்தது.
இப்போது பள்ளிக்கு செல்வது சொந்த வாகனம் வாங்கும் வரை ஆட்டோ மாதிரி ஒரு ஏற்பாட்டில். நடந்து போக நினைத்தாலும் ஏது நேரம்? பாடங்களை எழுதி படித்து முடித்து ஏதேனும் வயிற்றுக்கு இட்டுக்கொள்ளவே நேரமில்லை.
பள்ளியில் வைட்டமின் டி நமக்கு சூரிய ஒளியில் உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று படித்தோம் இல்லையா? நம் நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஏறத்தாழ ஆண்டு முழுதும் சூரிய ஒளி மிகுந்த நாட்களாகவெ இருப்பதால் நமக்கு அதன் குறைபாடு -டிபிசியன்சி - வராது என்று ஒரு கருத்து இருந்தது.
ஆமாம். இருந்தது. இப்போது இல்லை! இப்போது நடக்கும் ஆராய்ச்சிகள் நம்மில் பலருக்கும் அந்த குறைபாடு இருக்கிறது என்று சொல்கின்றன. காரணம் நம் வாழ்கை முறை. எங்கே போனாலும் ஏதேனும் ஒரு வண்டியில் போகிறோம். பக்கத்து தெரு என்றால் கூட நடந்து போய் வரலாம் என்று நினைப்பதில்லை! குறைந்தது ஒரு டூ வீலர் தேவையாக இருக்கிறது! வெயிலில் போனால் சருமம் கருத்துவிடும் என்று க்ரீம் பூசிக்கொள்பவர் அதிகமாகி வருகிறார்கள். டிவிசி உபயம்! அதனால் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இது குறைவதற்கும் டயபெடிஸ் வருவதற்க்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். குறைபாடு உள்ளவர்களுக்கு வைட்டமின் டி கொடுத்து வந்தால் டயபெடிஸ் வெளிப்படுவது தாமதமாகிறது என்கிறார்கள். இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆராய்ச்சிகள் நடக்கின்றன; நாம்தான் நடப்பதில்லை.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ரத்தத்தில் வைட்டமின் டி அளவை பரிசோதியுங்கள். இது இன்னும் பல டாக்டர்களுக்கும் கூட தெரியவரவில்லை!
என் டாக்டர் நண்பரின் அப்பாவுக்கு தீராத இடுப்பு வலி இருந்தது. கடைசியாக ஒரு சீனியர் டாக்டரை போய் பார்த்தார். அவர் பொது மருத்துவர்தான்! அது வரை துறை நிபுணர்கள் பல பேர் பார்த்து நிறைய எக்ஸ்ரே எல்லாம் எடுத்து என்னென்னமோ மருந்து எல்லாம் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொண்டு என்று எல்லாம் ஆகிவிட்டது! இவரோ சோதனைகளை முடித்துவிட்டு சொன்னது - "உங்களுக்கு ஒரு மருந்தும் தேவையில்லை. தினமும் 2 கிலோமீட்டர் நடங்கள். அது போதும்!" மூன்று மாதத்தில் சரியாகிவிட்டது!
உடல் பருமனை குறைக்க நடக்க வேண்டி இருக்கிறது. இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் கூட நடக்க வேண்டி இருக்கிறது. சின்ன வயசில் நடந்து பழகாவிட்டால் வயதான பிறகு காசு செலவழித்து வீட்டில் வாக்கிங் மெஷின் வாங்கி வைத்து நடைபழக வேண்டி இருக்கிறது! தினசரி ஒரு மணி நேரம் நடந்தால் டயபெடிஸ் (இரண்டாம் வகை) வரும் வாய்ப்பு 50% குறையும்; இதய நோய்கள் வரும் வாய்ப்பு 30 - 40% குறையும்; பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வாய்ப்பு 20% குறையும் என்றெல்லாம் சொல்கிறார்கள்!
நடப்பது மிக எளிதாக எல்லாரும் செய்யக்கூடிய உடற் பயிற்சி. குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். மாலை வெயிலில் நடப்பது மேலே சொன்ன காரணத்துக்காக நல்லது. வீட்டுக்கு வெளியே கிளம்பி குறைந்தது வேர்க்க ஆரம்பிக்கும் வரை வேகமாக நடக்க வேண்டும். பின் வீட்டுக்கு திரும்பலாம். வீடு நெருங்க நெருங்க வேகத்தை குறைத்துக்கொள்ளலாம். இப்படி நடக்கும்போது உடல் தன் அடிப்படை வளர்சிதை மாற்ற (மெடபாலிச) வேகத்தை அதிகமாக்கிக்கொள்கிறது. உணவு செரிமானம், செல்கள் புதுப்பித்தல் போன்ற பல வேலைகள் துரிதமாகும்.
நடக்கும் இடம் கூடிய வரை சுத்த காற்று கிடைக்கும் இடமாக இருக்கலாம். பார்க், பீச், மைதானம் நல்லது. அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் ரோடில் நடக்கலாம். ரோடில் எப்படி நடக்க வேண்டும்? ப்ளாட்பார்ம் நடக்கும் படியாக இருந்தால் அதில். இல்லாவிட்டால் ரோட் ஓரமாக.
இடது பக்கம் நடந்தால் வேகமாக நடக்கும் போது எதிரில் இருக்கும் எதையாவது தவிர்க்க திடீர் என்று வலப்பக்கம், இடப்பக்கம் நகர்ந்து நடக்க வேண்டி இருக்கும். அப்போது பின்னால் வரும் வண்டி நம் மேலே மோத வாய்ப்பு உண்டு. ரோடின் வலது புறமாக நடக்க வேண்டும். அப்படி நடந்தால் எதிரில் வரும் வண்டிகள் நம் பார்வையில் இருக்கும். நடக்க பாதுகாப்பு இருக்கும். எனக்குத்தெரிந்த டாக்டர் ஒருவர் சில நாட்களுக்கு முன் வாக்கிங் போகும் போது கத்துக்குட்டி ஆசாமி டிவிஎஸ் இல் பின்னால் வந்து மோதிவிட்டான்!
இரவில் வாக்கிங் போவதானால் கையில் பாதுகாப்புக்காகவும் ரோடை நன்றாக பார்க்கவும் கையில் ஒரு கனமாக டார்ச் எடுத்துப்போங்கள்! காலியில் வாக்கிங் போகிறவர்கள் எந்த கட்சியிலும் இல்லாமல் இருப்பது நல்லது! :-)
இன்னும் நிறைய விஷயங்கள் எழுதிக்கொண்டே போகலாம். முடிவு இராது!
55 வயசாகும் வரை, டயபெடிஸ் வரும் வரை என்றெல்லாம் காத்திருக்காமல் இன்றே நடக்க ஆரம்பிக்கலாம்!

thanks. இந்த வாக்கிங் போறவா செல்ஃபோன்ல டாக்கிண்டே வாக்கப்படாதுன்னு சட்டம் கொண்டு வரணும்.
பதிலளிநீக்கு:-)))
நீக்கு//இடது பக்கம் நடந்தால் வேகமாக நடக்கும் போது எதிரில் இருக்கும் எதையாவது தவிர்க்க திடீர் என்று வலப்பக்கம், இடப்பக்கம் நகர்ந்து நடக்க வேண்டி இருக்கும். அப்போது பின்னால் வரும் வண்டி நம் மேலே மோத வாய்ப்பு உண்டு. ரோடின் வலது புறமாக நடக்க வேண்டும். அப்படி நடந்தால் எதிரில் வரும் வண்டிகள் நம் பார்வையில் இருக்கும். நடக்க பாதுகாப்பு இருக்கும். //
பதிலளிநீக்குஇந்த விஷயத்திலே எங்க ரெண்டு பேருக்கும் கருத்து வேற்றுமை இன்னும் தீரலை. நான் வலப்பக்கமா நடப்பேன். சின்ன வயசிலே பெரியப்பா சொல்லிக் கொடுத்தது. அவர் எப்போவுமே இடது சாரி! தெருவிலே போகிறச்சே அவர் ஒரு பக்கமும் நான் இன்னொரு பக்கமுமாப் போவோம். :)))) யாராவது கூட வந்தால் அவங்க பாடு திண்டாட்டம் தான்! :))))
இடது பக்கம் நடக்கறத்துக்கு அவரோட லாஜிக் என்ன?
நீக்குவலது பக்கம் வண்டி வரது தெரிஞ்சு என்னா ஆக்கபோறது? இடது பக்கம் நம்ம பின்னால் வர எந்த வண்டியும் அனேகமா நம்மை ஓவர்டேக் பண்ணி போகணும். அப்ப பின்னால் வந்து இடிக்க வாய்ப்பு இருக்கு!
நீக்குalways keep left thane rule, appo than right side vandi vantha theriyumnu solrar! :))))))
பதிலளிநீக்குstill the arguement continues Your Honour! :))))))))
பதிலளிநீக்கு